இந்தியாவில் பிரதமராக வேண்டுமெனில் மக்களவையில் 272 எம்பிகளுக்கு தலைவர் ஆகவேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்திருந்த எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யுபிஐ கட்டணம் நிர்ணயித்தது குறித்த கேள்விக்கு முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும் பின்னர் அனைத்திற்கும் டாக்ஸ் போட ஆரம்பித்து விடுவார்கள்.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு குறித்த கேள்விக்கு எந்த ஒரு ப்ராஜெக்ட் பண்ணினாலும் உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் பண்ண முடியாது. அந்தப் பகுதியில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அப்புறப்படுத்தி மாற்றப்படுபவர்கள். அவர்கள் ஒப்புதல் இல்லாமல் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு பெரிய ப்ராஜெட்டும் இந்தியாவில் பண்ண முடியாது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடி வருவது தொடர்பான கேள்விக்கு நிலம் கையகப்படுத்தப் பட்ட பின்னர் அதனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், கையகப்படுத்தப் பட்ட நிலம் பொதுப் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பரந்தூர் விமான நிலையத்தைப் பொறுத்தவரை, “நான் பரந்தூரை தேர்வு செய்யவில்லை; அதேபோல் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்யவும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். சென்னைக்கு உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விமான நிலையம் அவசியம் என்று கூறிய அவர், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு விமானப் போக்குவரத்து கட்டமைப்பில் பின்தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். முன்பு ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியவர்கள் சென்னைக்கு வந்து விமானப் பயணம் மேற்கொண்டதாகவும், தற்போது அந்த நகரங்களில் இருந்து பல்வேறு சர்வதேச நேரடி விமானங்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சென்னைக்கு புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் ஏற்கெனவே 10 முதல் 15 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழலில் அது மேலும் பல ஆண்டுகள் தாமதமாகக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் பதவி தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகக் கூறிய கார்த்தி சிதம்பரம், இந்தியாவில் பிரதமராக வேண்டுமெனில் மக்களவையில் 272 எம்பிகளுக்கு தலைவர் ஆகணும். தனிப்பெரும் பெரும்பான்மையாக தலைவராகணும் அல்லது கூட்டணிக்கு தலைவராகணும். தேர்தல் முடிந்த அரசியல் தெரிந்தவர்களுக்கு எந்தெந்த கட்சிக்கு கெபாசிட்டி இருக்கும் என்று தெரியும். எந்தெந்த பார்ட்டிக்கு கெப்பாசிட்டி இருக்கோ அந்தப் பார்ட்டி தான் பிரைம் மினிஸ்டர் ஆக முடியும் இது தேவையில்லாத சர்ச்சை.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தலைவர்களைப் புகழ்வது வழக்கமான ஒன்று என்றும், குறிப்பாக தமிழகத்தில் இந்த நடைமுறை அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு ரசிகர்கள் பின்னர் வாக்காளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் மாறியிருப்பதால், அவர்களைச் சுற்றி ஹீரோ கலாசாரம் இருப்பது இயல்பானது.
இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக தமக்கு முழுமையான தகவல் இல்லை என்றும், ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதேனும் மனவருத்தம் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு ராமேஸ்வரத்தில் கோயில் கோபுரத்தை காண்பித்த பிரதமர் பற்றிய கேள்விக்கு, பிரதமர் தமிழகத்தின் அடையாளங்களை வெளிப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளின் கலாசாரம் மற்றும் அடையாளங்களையும் உரிய முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தமிழகத்தின் உணவுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் செட்டிநாடு உணவு வகைகளையும் விருந்துகளில் இடம்பெறச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.