சிவகங்கை:

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் தமிழக அமைச்சர் சரத்குமார் போதை மாத்திரை உபயோகித்ததாக கூறப்படும் சம்பவத்தில் அவரை கைது செய்யக்கோரி திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காவல்துறை அனுமதி இன்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”