சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த மாநில செயலாளர் பெ. சண்முகம், அரசின் வருவாயை அதிகரிக்க கனிம வளங்களை தமிழக அரசே நேரடியாக நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், போதைப்பொருள் கலாச்சாரமே பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறி, ‘போதையில்லா தமிழ்நாடு’ இலக்கை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகம்வில் சேர்வது வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் இடைத்தேர்தல்களுக்கு வழிவகுப்பதால் ஊக்குவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும், திமுக–அதிமுக இணைப்பு குறித்து கட்சி பொதுச்செயலாளர் கூறிய கருத்தை தாம் மறுத்ததில்லை என்றும் விளக்கமளித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.