தேவகோட்டை, ஆக. 6: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகரக் குழு சார்பில் நடைபயண பரப்புரை நடைபெற்றது.
தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் தொடங்கிய இந்த நடைபயணத்தை, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான காமராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
நகரச் செயலாளர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற நடைபயணம் தியாகிகள் பூங்காவில் இருந்து திருப்பத்தூர் சாலை, தியாகிகள் ரோடு, பழைய பேருந்து நிலையம், வாரியார் வீதி வழியாக ஒத்தக்கடை வரை சென்றது. வழியெங்கும் பொதுமக்களிடம் கட்சியின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்த நடைபயணத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.