சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் நீர்நிலை உயர்ந்துள்ளது. முக்கிய சாலைகள் சில இடங்களில் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் நீர் தேக்கம் அதிகமான பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.