சேலம் : சேலம் ரயில்வே  கோட்டம் சார்பில்  அயோத்தியபட்டணத்தில் 2-ஆவது ரயில் பெட்டி  உணவகம் தொடங்கப் பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் தனியார் குத்தகை அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் ரயில் பெட்டி உணவகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேலம் ரயில்வே கோட்ட எல்லைக்குள் ஏற்கனவே கோவையில் ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக சேலம் அயோத்தியா பட்டணம் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் 48 பேர் அமர்ந்து உணவு அருந்தக் கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”