சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை எதிர்கொள்ளும் வகையில் நீர் ஓடை பகுதிகள் தூர் வாருவது வழக்கம். 

இதன்படி இந்த ஆண்டிற்கான பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள நீர் ஓடை சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினால் தூர்வாரப்பட்டு வருகிறது. 

இதனை  போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார். பருவமழை காலங்களில் கந்தம்பட்டி பைபாஸ் நீர் ஓடையில் தண்ணீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அதேபோல அருகில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் இந்த முறை தண்ணீர் தேங்காத அளவிற்கு பணிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்

மேலும் பருவமழையின் போது சாலைகளில் தண்ணீர் வருவதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சேலம் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”