குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் வித்யா ரம்பம்... சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கப்பட்டது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ற வகையில் கஷ்டங்கள் துன்பங்கள் மறந்து வாழ்க்கையில் நன்மை பெறுக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஆயுத பூஜை விழாவை தொடர்ந்து இன்று சரஸ்வதி பூஜை எனப்படும் விஜயதசமி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

கல்வி கடவுளான சரஸ்வதிக்கு உகந்த தினமான இந்த நாளில் குழந்தைகளுக்கு கல்வி அறிவிக்கும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனடிப்படையில் சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா நகர் ஐயப்பன் ஆலயத்தில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யா ரம்பம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் கோவில் குருக்கள் குழந்தைகளுக்கு நாவில் பச்சரிசி தேன் போன்றவற்றை தடவி அ ஆ வண்ணா போன்ற எழுத்துக்களை எழுதி கல்வியின் முதற்கட்ட நாளை தொடங்கி வைத்தனர்.

இன்று முதல் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்க சிறப்பு சேர்க்கையும் நடைபெறுகிறது இதனால் கோவில்களில் குழந்தைகளுக்கு நாவில் எழுதிவிட்டு தொடர்ந்து பள்ளியில் சேர்த்து அவர்களுக்கு கல்வியின் பயணம் தொடர பெற்றோர்கள் வழி வகுக்கின்றனர்.
இதன்படி சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இன்று எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு நாவில் தாய்த் தமிழின் முதல் வார்த்தைகளை எழுதி கல்வியை தொடங்கி வைத்தனர் இதனை ஒட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அலங்காரங்கள் செய்யப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி வழிபாடு செய்தனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.