மேட்டூர் அருகே நவபட்டியில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 26 பயணிகள் காயமடைந்தனர்.

மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்தை ஓட்டுநர் சரவண முத்து இயக்கி சென்றார். நவப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளை ஏற்ற தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது.கோவை நோக்கி  வந்த அரசு பேருந்து தனியார் பேருந்தின் பின்பக்கம் பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 16 ஆண்கள், 8 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 26 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் அரசு பேருந்தில் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து சாலையின் நடுவே நின்றது. இதனால் மேட்டூர்- ஈரோடுசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து ஏற்பட்டு சாலையில் நடுவே நின்ற அரசு பேருந்தை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.இந்த விபத்து குறித்து மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”