சேலத்தில் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இரண்டு மூட்டைகளில் கட்டி வீசப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.

துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து வீட்டில் வசிக்கும் பூசாரி ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழு துண்டுகளாக பெண்ணின் உடலை வெட்டி  அதை மூன்று மூட்டைகளாக கட்டி வீசப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”