சேலம், செப்.8-
மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே 4 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் எதிரே தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்திற்கு திட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஸ்ரீதேவி துவக்க உரையாற்றினார்.

ஈரோடு மின் திட்ட தலைவர் ஜோதிமணி கண்டனம் உரையாற்றினார்.
இதில் அனல் மின் நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எஃப்.டி.ஏ. எனப்படும் ஆள்சேர்ப்பு விதிமுறையை திரும்பப் பெற வேண்டும், ஒப்பந்த முறையை ஒழித்து தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், நீதிமன்றங்களுக்கு சென்ற பல ஆண்டுகள் வழக்கு நடத்தி பெறப்பட்ட தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் தொழிலாளர் நலன் கருதி அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.