சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து12,350 கன அடியாக அதிகரித்து வருகிறது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் திறக்கபடும் உபரி நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை  வினாடிக்கு

12.174. கன அடியிலிருந்து இன்று காலை நிலவரம்படி 12.350 கன அடியாக அதிகரித்துள்ளது .தற்போது அணையின் நீர் மட்டம் 82.70 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.70 டி.எம்.சி.உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”