மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை நாளை காலை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருவதை முன்னிட்டு மேட்டூர் அணையின் தீவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது திண்டுக்கல் மாவட்ட டி ஐ ஜி சசிமோகன் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மேட்டூர் அணையை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் அணை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணையில் வலது கரையில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் அணையில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் வரவேற்க மேட்டூர் மேச்சேரி ஆகிய பகுதியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சாலையில் இருபுறமும் கொடி மற்றும் பேனர்களை வைத்து உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் அனையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேட்டூர் பகுதியில் 1000 மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருக்கின்றனர்.
முதல்வர் நிகழ்ச்சி நிரல்:
| காலை 11.00 மணி | சேலம், காமலாபுரம் விமான நிலையம் வந்தடைதல் |
| 11.02 மணி | தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றல் |
| 11.05 மணி | காவல்துறையினரின் மரியாதையினை ஏற்றுக்கொள்ளுதல். |
| 11.06 மணி | சேலம், காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து மேட்டூர் அணைக்கு புறப்படுதல். |
| பகல் 12.00 மணி | மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தல். |
| 12.10 மணி | மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுதல். |
| 1.30 மணி | சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைதல். |
| 1.30 மணி | சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைதல். |
| 1.30 மணி | சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைதல். |
| 1.30 மணி | சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைதல். |

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.