தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும் தவெக கட்சி கொடியான மஞ்சள் சிகப்பு வண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு , ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களின் பெயர் பேருந்து வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. அது போல தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சியும் தங்களுக்கு விருப்பமான வண்ணங்களை பேருந்திற்கு வழங்கி உள்ளது.
அதில் கட்சியின் வண்ணம் அப்பட்டமாக இடம் பெற்றுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.