விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் 1 அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றின் படித்துறையில் வைக்கப்பட்டு தேங்காய் பழம் உடைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் விநாயகர் சிலையை பக்தர்கள் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர்.திப்பம்பட்டி,கூணாண்டியூர், கீரைக்காரனூர்,காவிரி பாலம், சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறை சார்பாக விநாயகர் சிலைகள் ஆற்றில் இறங்கி எடுத்துச் செல்ல 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிலைகள் கரைக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைத்தனர். இன்று காலை முதல் 100 மேற்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. கூடுதலாக விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்க பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலை கரைக்க வரும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.