சென்னை: கூட்டணியில் இருந்தால் அவர்களோடு, இல்லவிட்டால் அவர்கள் இல்லாமல், எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களம் காண்போம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தற்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணியில் இல்லை என தான் கூறியுள்ளார். எப்போதும் இல்லை என கூறவில்லை... கம்யூனிஸ்ட் தோழர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணியில் இருந்தனர். 10 ஆண்டுகாலம் எங்களோடு இணைந்து பணியற்றியதற்கு திமுக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறது. பலமுறை எங்களோட நட்போடு இருந்து சென்றுள்ளனர். இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை என சொல்லவில்லை என்றார்.
உடன் இருந்தால் அவர்களோடு, உடன் இல்லவிட்டால் அவர்கள் இல்லாமல் எதிர்த்தால் அவர்களையும் எதிர்த்து களம் காண்போம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , ஒருநாளில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஏற்பட்ட மன சங்கடம் குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. திமுக தனித்து விடப்பட்டாலும் கவலை இல்லை. 2017 ல் அமைந்த கூட்டணி கட்சியினர் இப்போது வெளியேறி வருவதால் திமுக தனித்து விடப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார். மேலும் , தனித்து விடப்பட்டாலும் திமுகவிடம் தனி பலம் இருக்கிறது
கூட்டணி இல்லை என்றாலே கட்சி தொண்டர்கள் தெம்பாக இருப்பார்கள். காங்கிரஸ் எக்ஸ்ட்ரா லக்கேஜ். 234 தொகுதிகளில் போட்டியிட்டு தனித்து வெற்றி பெறுவோம் , ஆட்சி அமைப்போம். கூட்டணி கட்சியினரை நன்கு மதித்தோம் என்பதற்கு தகைசால் தமிழர் பட்டம் கொடுத்ததே சான்று. கூட்டணி கட்சியினர் தேர்தலுக்கு பின் தங்களது நிறத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கொள்கையோடு கூட்டணிக்கு வந்தவர்களின் கொள்கை இப்போது கேள்வி குறியாகி உள்ளது. இவர்கள் வெளியேறுவதை பார்த்து திமுக யார் சோற்றில் மண் அள்ளி போட்டது என மக்களே கேட்கும் நிலையில் தான் உள்ளது. ஒரு மாதத்தில் இந்த அரசு என்ன மாற்றம் செய்து காட்டியது. திமுக என்ன தவறு செய்தது என கூட்டணியை விட்டு வெளியேறுபவர்களை தான் கேட்கவேண்டும் என்றார்.
மின்வெட்டு செயற்கையானதா? திட்டமிட்டு செய்யப்படும் சதியா? என்ற கேள்வி எழுகிறது சினிமாவை போல, இல்லாத மின்வெட்டை நிர்வாக திறன் இன்மையால் ஏற்படுத்தி, அதனை ஒரே மாதத்தில் எங்கள் தலைவர் நிவர்த்தி செய்தார் என பேசுவதற்காக செய்கின்றனர் என தோன்றுகிறது.
மின்வெட்டு செயற்கையானதா திட்டமிட்டு செய்யப்படும் சதியா என்ற கேள்விக்குறி எழுப்புகிறது. 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இதை விட கடுமையான வெயில் இருந்தது. ஆனால் இது போன்ற மின்வெட்டு இல்லை என்று தெரிவித்தார்.
பெண்களுக்காக தனியாக காவல்துறையில் பெண்கள் பிரிவை உருவாக்கியவர் கலைஞர். அதனோட தொடர்ச்சி தான் சிங்கப்பெண் படை என கூறினார். சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை காவல்துறை மட்டுமல்ல, தனிநபர் ஒழுக்கமும் சேர்ந்து தான் காக்க வேண்டும். என்பதை திமுகவிற்கும் தெரியும். ஆனால் முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்பாக தான் கூறியதை அவர் காப்பாற்ற வேண்டும்.
தேர்தல் நேரத்தில் குறைவான தொகுதி கொடுக்கும் பொழுது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டியதுதானே ?
திமுக காங்கிரஸுக்கு கொடுத்த 28 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். தமிழக வெற்றி கழகத்திற்கு 108 வெற்றி பெற்று இருக்காது.
ஸ்ரீவைகுண்டம் பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ சரவணன் பெயரும் சொல்லப்படுகிறது என்ற கேள்விக்கு.... சட்டப்படி முறையான நடவடிக்கை எம்.எல்.ஏ மீது எடுக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் உதயநிதி எடுப்பார்.. அதற்கு திமுக உடன் நிற்க வேண்டும் என கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.