சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற ரஜினிகாந்த்,மு.க.ஸ்டாலினை  சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, "வெற்றிபெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்" என்று ரஜினி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தவெக் தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related

“பள்ளிகளில் காலியாக உள்ள 1800 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும்: அன்புமணி ராமதாஸ்”