பொன்னேரி அருகே நடைபெற்ற ரத்ததான முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார்.
தமிழ்நாடு செல்போன் சங்கம் மாநிலத் தலைவர் R B சோமசுந்தரம் அவர்களின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு செல்போன் சங்கம் மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்தத்தானம் முகாம் நடைபெற்றது.
பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு செல்போன் சங்கத்தின் நிர்வாகி J ராமு தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.
தொடர்ந்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு பழம், குளிர்பானம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இதில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.