இருங்களூர் எஸ்.ஆர். எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா.தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூர் பகுதியில் உள்ள எஸ் ஆர். எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக தலைவர் டாக்டர் ஆர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி. கே .பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார். 

தொடர்ந்து 150 எம்பிபிஎஸ் மற்றும் 30 முதுகலை மருத்துவ பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் எஸ். ஆர். எம். தலைமை இயக்குநர் டாக்டர் சேதுராமன், சார்பு துணைவேந்தர் சமீரூதீன் கான், துணை இயக்குனர்கள் டாக்டர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதேவி சேஷாத்ரி மற்றும் பேராசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”