கோவையில் மாநில பொதுக்குழு கூட்டம் முடிந்து திருச்சி வழியாக பெரம்பலூர் வந்து சொந்த ஊரான அரும்பாவூருக்கு இரு சக்கர வாகனத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் அலி மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சபீர் அகமது இருவரும் சென்று கொண்டிருந்தனர். 

இரவு இரண்டு மணி அளவில் வேப்பந்தட்டை ஆற்றுப் பாலத்தை கடந்த போது பாலத்திற்கு வலது புறம் பள்ளத்தில் கார் கவர்ந்து கிடப்பதை மாவட்ட துணைச் செயலாளர் சபீர் அஹமதுபார்த்து உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொன்னார். 

மாவட்டச் செயலாளரும் மாவட்டத் துணைச் செயலாளரும் உடனடியாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தினர் சிலரை நிறுத்தி இறங்கச் செய்து வேப்பந்தட்டையில் காவலுக்கு நின்ற காவலர்களுக்கும் தகவல் அளித்து காரில் ஆபத்தான நிலையில் யாரேனும் உள்ளார்களா என்பதனை பார்த்தனர். 

நன்றி-TN46-AMN NEWS

செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் அந்த காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. உடனடியாக சுற்றி இருந்தவர்கள் உதவியோடு பள்ளத்தின் கீழே இறங்கி காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இறங்கி பாதுகாப்பாக அந்த முதியவரை மீட்டனர். 

பின்னர் காவல்துறை உதவியுடன் 108க்கு தகவல் தந்து பாதுகாப்பாக அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காவல்துறையினர் மூலமாக விசாரித்த போது அந்த முதியவர் நலமாக இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. பயணக் களைப்பையும் பொருட்படுத்தாமல் நடுநிசியில் முதியவரை காப்பாற்ற முயற்சி செய்த மனிதநேய மக்கள் கட்சியினரின் சேவையை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். 

Related

“​சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2 வது நாளாகத் தடை!”