கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வெளியிலும், ஏரிக் கரைகளிலும், பயனுள்ள பல்வேறு மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றார் 80 வயது பெரியவர் கீழப்புலியூர் கருப்பையா.

நூற்றுக்கும் மேற்பட்ட விரிந்து நிற்கும் பழ மரங்கள் பறவைகளுக்கு உணவளிக்கும் அன்ன சத்திரங்களாக விளங்கி வருகின்றன. வள்ளல் பெருமகனார் வழியில் உயிர்களுக்கு உணவளிக்கும் உயரிய பணியை ஆற்றி வருகின்றார்.

இவரது அரும்பணியை பாராட்டி" தமிழ்க்காடு" அமைப்பு மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில்,அரும்பாவூர் மருத்துவர் கோபால், மருத்துவர் புவனேஸ்வரி தேவராஜன், வரலாற்று ஆய்வாளர் ஜெய்பால் ரத்னம், பொறியாளர் கிருஷ்ணசாமி, கல்வியாளர் ஜெயராமன்,கால்நடை மருத்துவர் சுப்பிரமணியன், கவிஞர் அகவி,இரமேசு கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்."பறவைகளுக்கோர் உணவுச்சாலை" என்ற வாழ்க்கை வரலாற்று நூல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்புலியூர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கீழப்புலியூர் பச்சையம்மன் கோயில் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related

“கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!”