பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் ஐடியல் பள்ளியில்  நாட்டின் 80 வது சுதந்திர தின கொடியேற்று  நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐடியல் பள்ளியில் நடைபெற்ற தேசியகொடியேற்று நிகழ்ச்சிக்கு  தாளாளர் உமர் பாருக் தலைமை யேற்றார். ஐடியல் பள்ளி இயக்குநர்கள் கமால் பாஷா, பொறியாளர் ஷேக் முஹம்மத், ஜியாவுல்ஹக் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

 சிறப்பு விருந்தினராக லண்டனில் இருந்து வருகை தந்த பொறியாளர் ஷக்கீர் அஹமது கலந்து கொண்டு மாணவ, மாணவிருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

கொடியேற்று நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியதோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

Related

“காவல்துறை தடையால் இடமாற்றம் செய்யப்பட்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ”