தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது எதை பேசவேண்டுமோ அதனை பேச மறுக்கிறார்கள் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சரே சட்டமன்றத்தில் பேசும் நிலை உள்ளது என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்: நேபாளத்தில் நடைபெற்ற பெரு வெள்ளம் யாரும் எதிர்பாராத நிகழ்வாக நடந்து விட்டது சுனாமியை விட மிகப்பெரிய கோர தாண்டவம் இந்த வெள்ளத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் நேபாளம் சென்ற நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது இதில் தமிழர்களும் பலர் சிக்கித் தவித்து வருகின்றர். மூன்று பேருந்துகளில் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் கண் முன்னே இரண்டு பேருந்துகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது அதில் 21 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் நேரடியாக சென்று பார்த்து வரவேற்றோம் அவர்களது உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது பலரது பாஸ்போர்ட் இல்லாமல் போய்விட்டது அதனை கருத்தில் கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாஸ்போர்ட் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் அந்த நாட்டு அரசுடன் இணைந்து தேர்தல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார் மூன்று விமானங்களில் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமராக ராகுல் காந்தி வர முடியாது அந்தக் கனவு பலிக்காது என அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு எந்த விதமான தகுதியும் கிடையாது ராகுல் காந்திக்கு இத்தாலி நாட்டு மீதுதான் அக்கறை அதிகம். இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு எப்போதுமே அக்கறை இருந்தது கிடையாது அதனால் தான் சோனியா காந்தி வந்தே மாதரம் பாடல் பாடும் போது தடுத்து நிறுத்தினார். மக்கள் ராகுல் காந்தியை பிரதமராக வேண்டாம் என நிராகரித்து விட்டார்கள் அதனால் தான் ஆசை இல்லை என சொல்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என இருந்த சட்டமன்றத்தில் இப்போது யார் யாரெல்லாமோ இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். அதற்காகத்தான் சட்டமன்றமும் கூடுகிறது. சட்டமன்றத்தில் எதைப் பேச வேண்டுமோ அதை பேச மறுக்கிறார்கள் சாதி மதம் குறித்து தேவையற்ற விவாதங்கள் தான் நடந்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் வேதனை அளிக்கிறது வாக்களித்த தமிழக மக்கள் சட்டமன்றத்தின் நிகழ்வுகளை பார்த்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.