நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது.ஆளுனர்  தலைமையில் நடக்கும் பட்டமளிப்பு விழவில் 37877 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் பெறுகின்றனர்.

இதில் தமிழக டிஜிபி,மும்பை காவல்துறை துணை ஆணையாளர்,நிலக்கோட்டை நிதிபதி ஆகியோர் ஆளுனரிடம் நேரடியாக டாக்டர் பட்டம் பெறுகின்றனர். தினத்தந்தி பொன்விழா பதக்கம் உள்ளிட்ட இரட்டை பதக்கங்களை 2 மாணவிகள் பெறுகின்றனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28-ஆம் தேதி காலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன் குரூப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 827 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். மேலும், ஆளுநரிடம் இருந்து நேரடியாக முனைவர் பட்டம் மற்றும் பல்கலைக்கழகப் பதக்கங்களை 175 மாணவர்களும், 696 மாணவிகளும் என மொத்தம் 871 பேர் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு இரண்டு மாணவிகள் தலா இரண்டு பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி, தினத்தந்தி பொன்விழா தங்கப்பதக்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்களை பெறுகிறார். அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இரண்டு பல்கலைக்கழகப் பதக்கங்களை பெறுகிறார்.

மேலும், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி பிரிவில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் நிலக்கோட்டை முதுநிலை நீதிபதி திருவேணி ஆகியோர் பட்டம் பெறுகின்றனர். அதேபோல், மேலாண்மையியல் பிரிவில் மும்பை காவல்துறை துணை ஆணையாளர் ராதா சுதாவும் பட்டம் பெறுகிறார்.

33-வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

Related

“மதுபானக் கடைகள் தனியார் மயமா? அமைச்சர் விக்னேஷ் பதில்!”