திருநெல்வேலி கோல்ட் லயன்ஸ் கிளப் சார்பாக ஆசிரியர் தின கொண்டாட்டம் திருநெல்வேலி ஹோட்டல் ஆர். ஆர். இன்னில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் லயன் டி சிவா தலைமை தாங்கினார். செயலாளர் லயன் கோபி கண்ணன், பொருளாளர் லயன் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஆர். செல்வராஜ், மேல நீலித நல்லூர் வட்டார கல்வி அலுவலர் வி இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது . இதில் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி உட்பட ஐந்து ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் லயன் சுந்தர மகாலிங்கம், வழக்கறிஞர் லயன் ஆறுமுகராஜ் , லயன் M.S.T. ராஜா , லயன் தமிழ்மணி , லயன் கந்தவேல் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லயன் ஷேக் முகமது கௌதலி , லயன் செய்யது மசூத் கனி ஆகியோர் செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.