நாசரேத் அருகே ஓடும் பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி முதல் தெருவை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 29). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நாசரேத்தில் இருந்து மதுபோதையில் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியதால், பயணிகள் அவரை பிடித்து நாசரேத் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி போக்சோ வழக்கில் வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”