தூத்துக்குடி தமிழக சிறு குறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக சிறு குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் மதன்ராஜ் இன்று தனது தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மேலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளதா? போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளனரா? என ஆய்வு மேற்கொண்டார் .
இதைத்தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.