மதுரை: மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸை, சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து, காலை கைது செய்துள்ளனர்.

மதுரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்புப் பகுதிக்கு அருகே வசிக்கிறார் யூடியூபர் மாரிதாஸ். இவர் விஜய் தலைமையிலான தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், சில வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வந்துள்ளார்.

இவ்வாறாக தவெக அரசுக்கு எதிராகப் பேசி வந்த யூடியூபர் மாரிதாஸ் மீது சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து மதுரையில் இருந்த மாரிதாஸை கைது செய்ய இன்று காலை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மதுரை வந்தனர். இந்நிலையில், மதுரை கே.புதூர் போலீஸார் உதவியுடன் சென்னை சைபர் க்ரைம் போலீஸார், அதிரடியாக வீட்டுக்குள் புகுந்த யூடியூபர் மாரிதாஸை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை சென்னைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….

மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்.

Wait a minute… ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா? நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க… அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.ஆதவ் அர்ஜூனா அவர்களே… ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?

இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே? மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?  அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.  உடனடியாக மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதாக அதிமுக அந்த பதிவில் தெரிவித்துள்ளது. 


 

Related

“"கண்மாயை மீட்டுத் தாருங்கள்!" – தாம்பூல தட்டுடன் ஆட்சியரிடம் மனு- உடனடியாக ஆய்வுக்கு புறப்பட்ட ஆட்சியர்!”