மயிலாடுதுறையில், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான, வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை நடைபெற்றது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன வீதி உலாவை துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி வலது கரை, உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற வதான்னேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ரிஷப தேவரின் ஆலவத்தை சிவபெருமான், குருவாக இருந்து உபதேசத்து அடக்கியதாக புராண வரலாறு தெரிகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் புனித காவிரி துலா உற்சவத்தின் போது இறைவன் வீதி உலா செல்வதற்காக புதிய வெள்ளி ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது . ஆறடி உயரமும் 7 அடி அகலமும் கொண்ட ரிஷப வாகனம் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் 50 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தி சுமார் ஒன்றரை கோடி மதிப்பில் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிஷ்டை விழா ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மந்தியம் பெருமானுக்கு விசேஷ அர்ச்சனைகள் நடைபெற்றன. தருமபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன வீதி உலாவை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.