மயிலாடுதுறை : மேகதாது பிரச்சனையில் மெத்தனப் போக்குடன் செயல்படும் தமிழக அரசை கண்டித்தும், விவசாய  பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். 

கர்நாடகா அரசு, காவிரியில் மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்யும் பிரச்சனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக தெரிவித்து, அதிமுக சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”