மயிலாடுதுறை புனித லூர்து மருத்துவமனை சார்பில், தரங்கம்பாடி புனித தெரசா கன்னியர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாமிற்கு புனித தெரசா கன்னியர் இல்லத்தின் தலைமைப் பொறுப்பாளர் அருட்சகோதரி மெர்சி தங்கம்,  தலைமை வகித்தார். முகாமை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அருட்சகோதரி வெரோனிகா மேற்கொண்டார்.

மருத்துவ முகாமில் டாக்டர் அருட்சகோதரி டீனா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இம்முகாமில் புனித தெரசா விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம்,  ரத்தச் சர்க்கரை, உள்ளிட்ட அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகளும், உடல்நலத்தைப் பேணுவதற்கான தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

பொதுமக்களிடையே நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பொதுமக்கள், புனித லூர்து மருத்துவமனை மற்றும் புனித தெரசா கன்னியர் இல்ல நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related

“அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்”