கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முன்பாக டாஸ்மாக பணியாளர் சங்கத்தினர் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊதிய வரன்முறை படுதப்படட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பில்லன்குப்பம் கிராமத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தின் போது டாஸ்மிக் கடையில் நடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அனைத்து டாஸ் மாக் ஊ முயல்களுக்கும் ஊதிய வர முறைப்படுத்தப்பட வேண்டும், காலிப்பாட்டில்களை அரசே கொள் முதல் செய்ய வேண்டும், டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். இறந்து போன டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த கண்டன கோசங்களை எழுப்பினார்கள் 

மேலும் இந்த ஆர்பாட்டத்தின் தமிழக அரசை வழியுறுத்தி நடத்தப்பட்ட இந்த கண்ட ஆர்பாட்டத்தின் வாயிலாக தமிழக அரசு உடனடியாக டாஸ்மார்க் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை என்று குறிப்பிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”