கிருஷ்ணகிரியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தவெக மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழத்தில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்த்தவர்கள் தவெக கட்சியில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி டான்சில் அமைந்துள்ள மத்திய மாவட்ட தவெக அலுவலகத்தில்அதிமுக மற்றும் மாற்று கட்சியினர்கள் தவெக கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

ஏஜாஸ் மற்றும் சரவணன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வின் போது அதிமுகவில் இருந்து நீலமேகம், கார்த்திக், சித்திக், நந்தகுமார், தயாநிதி, முரளி,பூபதி, கார்த்திக், கோவிந்தராஜ் அருண்குமார், சிவா, ராஜ்குமார், சுப்பிரமணி, ரிஸ்வான், நவாஸ், அப்சர், இதயாத், குமார், இஸ்மாயில், மார்ட்டின்,,ஆதில், இஸ்மாயில், தமிழ், சிவா, ,ஆத்திஸ், ராஜ்குமார், பாரூக்,அபிலாஷ்,ஈஸ்வரன், சுப்பிரமணி, சீனி, ஹரிஷ், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

அப்போது  அதிமுக மற்றும் மாற்றுக் கட்சி என பல்வேறு கட்சிகளில் இருந்து தவெக கட்சியில் இணைந்த அனைவருக்கும் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ்  கட்சி துண்டுகளை அணிவித்து வரவேற்றார். அப்போது வேலன், ரேணுகுமார், அருண்குமார், ஹரிபிரசாத், சக்திவேல் அஸ்லம்பாட்ஷா, குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related

“புதுக்கோட்டையில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்”