பர்கூர் வேளாங்கன்னி பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை மாநிலங்கவை உறுப்பினர் டாக்டர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான சி,வி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவிற்கு பள்ளியின் நிறுவனத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொலுபொம்மை கண்காட்சியினையும் பார்வையிட்டு சரஸ்வதி பூஜையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி பி எஸ் சி பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கையினையும் துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மட்டுமின்றி அதிமுக கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.