கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிரஸ் கிளப் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்கத்தின் செயலாளர் திருலோகசந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.கே.ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சங்கத்தின் மூத்த செய்தியாளரும், கௌரவ தலைவருமான அசோக் பாபு பூஜைகளை முன்னின்று நடத்தினார். 

பின்னர் உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு இனிப்பு, காரம் மற்றும் பொரி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் ரிஸ்வான், சுதர்சன் ராவ், அசேன், தினேஷ், இந்து பாஸ்கர், சின்ன குமரேசன், தீபக், பயாஸ், குமார், வேணு, பிரதீப், பிரதாப், ஜலில், சீமான் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related

“வடகிழக்கு பருவமழை: சோழிங்கநல்லூர் பகுதியில் அமைச்சர் விக்னேஷ் ஆய்வு”