கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
கணபதி பூஜை மற்றும் யாகசாலையுடன் துவங்கிய இந்த பூஜையில் தொடர்ந்து மூன்று நாள்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது, இதனையடுத்து இன்று புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு யாகசாலையில் விசேஷ ஹோமம் நடைபெற்றது.

இதனையடுத்து மங்கள வாத்தியத்துடன் பூரண ஆஹூதி செலுத்திய பின் சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆராத்தியும் காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர், பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர்கள் மற்றும் மரிக்கம்பள்ளியை சேர்த்த கிராம மக்களும் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் இந்த கும்மாபிஷேக விழாவினைத் தொடர்ந்து 48 நாள்களுக்கு மண்டல பூஜையும் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.