நாகூர் தர்ஹாவில் வரும் செப்.19, 20 தேதிகளில் தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு உத்தம திருநபியின் உதயதின விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.விழாவை முன்னிட்டு 500பேருக்கு நலத்திட்ட உதவியும், 1501 பேருக்கு பொதுவிருந்து நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்ஹாவில் தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் சார்பில் உத்தம திருநபியின் உதயதின விழா, இறைநேசர்கள் விழா, சமயநல்லிணக்க விழா ஆகிய முப்பெரும் விழா மதார் மரைக்காயர் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
சனிக்கிழமை இரவு தொடங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை பகல் 2 மணி வரை நடைபெற இருக்கிறது.
செப். 19 ம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கும் விழாவுக்கு தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில கெளரவ தலைவர் மற்றும் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் தலைவர் அல்ஹாஜ் ஜி.எம். ஹசன் குத்தூஸ் சாஹிப், ஃபைஜி ஆலோசனையின்படி தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில தலைவர் எம். ஆசாத் காதிரி தலைமை வகிக்கிறார்.

அன்றிரவு பொருள்வை, M. முஹம்மது ஹாமீம் ஜமாலி குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி செப். 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற இருக்கிறது. காலை 9.00 மணிக்கு – நாகூர் தர்கா அலங்கார வாசலிலிருந்து நிர்வாகிகளுடன் தர்ஹாவில் சிறப்பு ஜியாரத் செய்தல், துஆ ஓதுதல் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பரம்பரை வழித்தோன்றல் தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில துணைத்தலைவர் ஹஜ்ரத் B.T. பாவா சாஹிப் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் மாநில செயலாளர் ஐ. உமர் பாஷா, 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உத்தம திருநபியின் பெயரில் 1501 பேருக்கு சமய நல்லிணக்க பொது விருந்தினையும் துவங்கி வைக்க இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாகூர் தர்காவில் உரூஸ் காலங்களில் பாய்மரம் மற்றும் கொடி ஏற்றி இறக்கும் சிராங்கு மற்றும் குழுவினர்களுக்கு விருது வழங்கி மரியாதை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் பொதுச்செயலாளர் கே.சஜ்ஜாத் உசேன் காதிரி, மாநில முதன்மை செயலாளர் B. முஹம்மது அபுதாஹிர், மாநில அமைப்பாளர் முஸ்தபா தங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கு அனுமதி அளித்த நாகூர் தர்ஹா நிர்வாக கமிட்டிக்கு தமிழ்நாடு தர்ஹாக்கள் பேரியக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.