கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் மற்றும்கழிவு நீர் குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி .கே.ராஜீவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் இடம் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகள் செல்லும் இடங்களை பார்வையிட்டார்.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 42.15 அடிவரை சேமிக்கப்பட்டு உள்ளது அணைக்கு வினாடிக்கு 1057 கன அடி நீர் வரத்தாக உள்ள நிலையில் அணையில் இருந்து அதே அளவு நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் அணைப்பகுதியில் வெள்ளை போர்வை போர்த்தியது போல றுரைகள் காணப்பட்டது இந்த ரசாயன நுரைகள் சமீப காலமாக அப்பகுதியில் வீசும் பலத்த காற்றுக்கு அந்தப் பகுதி உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் சாலை பொதுமக்கள் மீது விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது சமூக வலைத்தளங்களில் கெலவரப்பள்ளி அணையை காப்போம் என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர் வி .கே.ராஜீவ் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகிறது. ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அவருக்கு அணைப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் நிலவரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.