கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே உடலில் டீசல் ஊற்றுக்கொண்டு தீக்குளித்த பஞ்சாப் மாநில லாரி டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது உடலுக்கு தீ வைப்பதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படி என்னும் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையோரமாக ராஜஸ்தான் - பஞ்சாபி தாபா செயல்பட்டு வருகிறது. இங்கு பஞ்சாப் மாநில லாரி ஓட்டுநர் தனது உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு, தனக்குதானே தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. உடலில் பலத்த காயங்களுடன் லாரி டிரைவர், சூளகிரி போலிசாரால் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சூளகிரி போலிசார் நடத்திய விசாரணையில், பஞ்சாப் மாநிலம், மான்சா மாவட்டத்தை சேர்ந்த குர்லால் சிங்(36) என்னும் லாரி டிரைவர் நேற்று முன்தினம் தாபா பகுதியில் தான் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி இரவு ஓய்வெடுத்த நிலையில் தனது செல்போனில் கேமரா ஆன் செய்து, டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியை உரசி பற்ற வைக்க முயல்கிறார். தீ பற்றாத நிலையில், தனது தாடியில் தீப்பற்ற வைத்துள்ளார். தீ உடல் முழுவதும் பரவிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மண், நீரை கொண்டு தீயை அணைத்து உயிரை காப்பாற்றி உள்ளனர். இந்த காட்சிகள் குர்லால்சிங்கின் செல்போனில் பதிவாகி உள்ளது, அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
தீ உடல் முழுவதும் பரவி, 80% பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். லாரி டிரைவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்.. என்பது குறித்து சூளகிரி போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.