கிருஷ்ணகிரி, ஆக.15

அதிமுக பொதுச் செயலாளரை பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக வேலுமணி, நத்தம் விஸ்வநதன் சொல்லும் கருத்துக்கள் வேதனையாக உள்ளது என கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

கிருஷ்ணகிரியில் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக துணை செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  மின்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. ஒரு கட்சியில் நிலையான உறுப்பினராக கூட இல்லை. கொள்கை இல்லாத மனிதர் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தேடி ஓட கூடியவர். அதிமுகவிலும் இருந்தார். தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று உள்ளார். வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரிடம் கேள்வி கேட்கும் போது அவர் இது ஒரு நாட்டின் பிரச்சனை என கருதி பதில் அளித்து இருக்க வேண்டும். ஆனால் கீழ்த்தரமான கருத்துக்களை சொல்கிறார். இது எனக்கு வெட்கமாக இருக்கிறது. அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இது போன்று பேசுகிறார். 

இன்று அனைத்து தரப்பு மக்கள் அரசு ஊழியர்கள் சொல்கின்றனர். கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்றும், இதற்கு பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டால் மேலிட உத்தரவு என பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இதுதான் இந்த அரசின் நிலைமையாக உள்ளது. 

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆனால் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வேலுமணி நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எங்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கின்றனர். மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படி என்றால் பொதுச் செயலாளர் சொல்வதை கேட்க வேண்டும் தானே. மறைந்த முதலமைச்சர் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது உத்தரவு போட்டால் அதை கேட்க மாட்டேன் என சொல்ல முடியுமா. அன்று ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட இவர்கள் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளாதது என்ன காரணம். வேலுமணி நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கடந்த நான்காண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டு அமைச்சராக இருந்து அனைத்து சுகங்களையும் ஏற்று கொண்டுள்ளனர். 

இப்போது ஏற்றுக்கொள்ளாததற்கு என்ன காரணம். அவர்கள் மனதில் ஏதோ ஒரு எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணம் அவர்களை இயக்குகிறது. இப்படி பொதுவெளியில் பொதுச் செயலாளரை விமர்சனம் செய்வது எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லும் கருத்து வேதனையாக உள்ளது. வேலுமணி நத்தம் விஸ்வநாதன் கருத்துக்களால் இன்று நம்மை பிற கட்சியினர்  கேவலமாக பேசுகின்றனர். இது வேதனையாக உள்ளது. இதற்கு யார் காரணம் எனது அன்பு சகோதரர்கள் வேலுமணி நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை மரியாதையோடு பார்க்கிறேன். இனி எந்த சூழ்நிலையில் அவர்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறினாலும் கூட நான் அவர்களை மரியாதையோடு பார்ப்பேன்.

தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் அனுமதிக்க படாதது தவெக தலைவர் முதலமைச்சர் விஜயின் ஆணவத்தின் உச்சம். இவர்கள் கேள்வி கேட்டு அதற்கு நாம் பதில் அளித்தால் மட்டும்தான் செய்தி வருமா? ஆணவத்தின் உச்சத்தில் உள்ளனர். முதலமைச்சர் சினிமாவில் நடித்து உயர்ந்தவர் அங்கு அவர் செல்லும் போது அவருக்கு எழுந்து நின்று மரியாதை தருவார்கள். அதேபோல் தற்போது முதலமைச்சரானால் அந்த மரியாதை கிடைப்பதால் ஆணவத்தின் உச்சத்தில் ஊடகங்களை மதிக்காமல் செயல்படுகிறார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக இணக்கமான சூழலை நோக்கி செல்வது தொடர்பான கேள்விக்கு, திமுக ஆட்சியில் இருந்தால் நேரடியாக பாஜகவை எதிர்பார்கள் இப்போது ஆட்சியில் இல்லை அந்த காரணத்தினால் ஒன்றும் தவறில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த அவையின் தலைவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால் அதில் கலந்து கொள்வதில் தவறில்லை. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கட்சிக்கும் சேர்ந்தவர் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் கலந்து கொள்வதில் தவறில்லை இதற்கு அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி எல்லோரையும் இந்த அரசு ஏமாற்றுகிறது வாக்குறுதிகள் அரசு அலுவலர்கள் ஏமாற்றி விட்டார்கள் விவசாயிகளை ஏமாற்றி விட்டார்கள் குடும்பப் பெண்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள். அதனையும் ஏமாற்றி விட்டார்கள் மாணவர்களுக்கு 4000 வழங்கப்படும் என அறிவித்தார்கள் அதுவும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படி எல்லா வாக்குறுதிகளும் ஒன்று கூட நிறைவேற்றாமல் அரசு அதிகாரிகள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தில் பேசுகின்றனர். 

ஆட்சிக்கு வந்த பின்பு ஆட்சி வாயிலாக இந்த அரசை முதலமைச்சராக நடத்தவில்லை. கொள்கையின் அடிப்படையில் நடத்தவில்லை சிந்தனையின் அடிப்படையில் நடத்தவில்லை. கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தேர்தல் வாக்குறுதிகள் முன்னெடுத்து ஆட்சி நடத்தவில்லை இதோ ஆட்சிக்கு வந்து விட்டார் அதிகாரிகள் சொல்கிறார்கள் அதுபோல் 9 மணிக்கு வந்து மாலை 5 மணி வரை ஆட்சி நடத்துகிறார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விடுகிறார். யாரையும் முதலமைச்சர் சந்திப்பதில்லை. ஒரு முதலமைச்சருக்கு 24 மணி நேரம் பத்தாது அவர் சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”