கிருஷ்ணகிரி: அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துக்களை தான் தோன்றித்தனமாக தெரிவித்துள்ளார். அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கொள்கை ரீதியாக தலைவராக ஏற்றுக்கொண்டு தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு ஒரு தலைவர் உருவாகி இருந்தால் அந்த தலைவர் எவ்வளவு பற்றோடு இருக்க வேண்டும் என தெரிந்திருக்கும், ஆனால் நெல்முள் குருவி போல் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு ஓடி ஓடி சென்றார். திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார், அதிமுகவுக்கு வந்தார் வாய்ப்பு கிடைக்கவில்லை, இறுதியாக தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று அமைச்சராகி விட்டார்.
அதிமுக தொண்டர்கள் வாக்களித்து தான் தமிழகம் வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது என ஆதவ் கூச்சப்படாமல் வெட்கப்படாமல் சொல்கிறார். அதிமுக தொண்டர்கள் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் தான் ஏற்றுக்கொண்ட தலைமைகாக கடுமையாக வெற்றி பெற வேண்டும் என இருக்கின்ற தொண்டர்களை சந்தர்ப்பவாதி ஆதவ் அர்ஜுனார் கொச்சைப்படுத்துகிறார். இதனை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் நேரடியாக அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பேப்பரில் தான் பொதுச்செயலாளர் என குறிப்பிடுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு நாவடக்கம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.