கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஜக்கப்பன நகர் 8வது கிராஸ் பகுதியில் இன்று சத்யா & சாய் பார்ட்டி மற்றும் மீட்டிங் ஹால் புதிதாக துவங்கப்பட்டது. விழாவில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பின் மாநில தலைவர் எல். அப்பாதுரை கலந்து கொண்டு விஜய் வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 594 மதிப்பெண் பெற்ற மாணவன் பவன் குமார் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 500/ 475 மதிப்பெண் பெற்ற மாணவி கேசவர்த்தினி மற்றும் ஜோத்பூர் ஐஐடி-ல் உயர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்று மாணவருக்கும் தலைமை விருந்தினர் அப்பாதுரை வாழ்த்துரை வழங்கி, சிறப்பு செய்தார். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட கம்பன் கழக தலைவர் ரவீந்தர், செயலாளர் மற்றும் ராஜராஜேஸ்வரி பள்ளியின் முதல்வர் திருஅருள் மற்றும் பொருளாளர் ஸ்ரீரங்கன் துணைத் தலைவர் பாலாஜி உட்பட சத்யா சாய் நிறுவனத்தின் நிர்வாகி திருமதி சத்தியவாணி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் பன்னீர்செல்வம் Mr.child ஆலோசனை மைய பயிற்சியாளர் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.