தமிழக அமைச்சரவையில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இடம் பிடித்ததையொட்டி கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.சி. ரகு தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 59 ஆண்டுகள் நடைப்பெற்ற ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதை யொட்டி அந்த அமைச்சரவையில் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. ரகு தலைமையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
இதில் கடந்த 59 ஆண்டுகளுக்க பிறகு தமிழ அமைச்சரவையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளினை காங்கிரஸ் கட்சியினர் தமிழக அரசுக்கும், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரித்து மகிழ்ந்தனர்.
அப்போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம். சி. இரகு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக. கிருஷ்ணமூர்த்தி, ராஜா குமார வேல், மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி, டாக்டர் தகி, கலைப் பிரிவு மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, மீனவரணி செல்வம், நகர தலைவர் ஸ்ரீராம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன், நகர் மன்ற உறுப்பினர் விநாயகம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வெற்றி முழக்கமிட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.