சென்னை: ஏழைகளுக்கு தொண்டாற்றுவதற்காக நடிகர் கே. ராஜன் பெயரால் அறக்கட்டளை துவக்க இருப்பதாக நடிகர் கே. ராஜனின் மகன் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.
மறைந்த நடிகர் கே. ராஜன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வு சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற்றது.
ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் வழக்கறிஞர் எல். முருகவேலு தலைமை தாங்கினார்.
சட்ட பேராசிரியர் சாம்பவமூர்த்தி, நடிகர் கே. ராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஏசிஎல் சீனிவாசன், நடிகர் கே. ராஜனின் மகன் சுரேஷ் ராஜன்,சென்னை பல்கலை உதவி பதிவாளர் முனைவர் சுந்தர், எட்வர்ட் ராஜா, பத்திரிகையாளர்கள் எஸ் எஸ் ஜெயமோகன், ரத்னம், தர்மலிங்கம், தாய்த்தமிழ் மக்கள் அறக்கட்டளை ராஜகாந்தி, சமூக சேவகர் பூபாலன், க லிங்கன், கதிர் மணி, பூங்கா குணசேகரன், வன்னியராஜன், பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் ஏழைப்பெண்களுக்கு சேலைகளை வழங்கி பேசிய நடிகர் சுரேஷ் ராஜன், ஏழை எளிய மக்களுக்கு சேவை யாற்றுவதற்காக நடிகர் கே. ராஜன் பெயரால் அறக்கட்டளை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சி நிரலை தமிழாசிரியர் முனைவர் தண்டபாணி சிறப்பாக தொகுத்தளித்தார்.
இறுதியில் ராயபுரம் ரவுண்டப் மக்கள் இயக்க செயலாளர் துரை. ரமேஷ் நன்றி கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.