கோவில்பட்டி; சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும், அதற்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமூக நீதித்துறை ஆலோசனைக் கூட்டத்தில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சட்டத்தை கொண்டுவர எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தலைமையில் அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை மற்றும் ரவி, பாண்டியன், பெருமாள் பாண்டியன், ராஜா, சென்னை முருக பாண்டியன் ஆகிய நிர்வாகிகள் சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில் இந்த சட்டம் இயற்றப்பட்டால் மேலும் பல புதிய சமுதாய மோதல்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகிவிடும். ஒருவர் செய்த தவறினால் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டு குடும்பத்தில் உள்ள நபர்களை பொய் வழக்கு போட்டு மிரட்டக்கூடிய தன்மை ஏற்படும். இதனால் அரசாங்க வேலை பார்க்கும் நபர்கள் வேலை இழக்க கூடிய தன்மை ஏற்படுகிறம் எனக் கருத்து தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.