கோவில்பட்டி : மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் START RUN - STOP DRUGS - மினி மராத்தான் மற்றும் வாக்கத்தான் நடைபெற்றது. மருத்துவர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு START RUN - STOP DRUGS என்ற தலைப்பில் மினி மராத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கதிரேசன் கோவில் சாலையில் தனியார் திருமண மண்டப முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் START RUN - STOP DRUGS விழிப்புணர்வு மினி மராத்தான் மற்றும் வாக்கத்தானை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி, கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், மருத்துவரின் சேவைகள் குறித்தும், போதைப்பொருட்கள் தடுப்புக்களின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினர். கதிரேசன் கோவில் சாலையில் தொடங்கிய மினி மராத்தான் மற்றும் வாக்கத்தான் ஏ. கே. எஸ். சாலை, அண்ணா பஸ்நிலையம், மாதங்கோவில் சாலை, கதிரேசன் கோவில் சாலை வழியாக வந்து தனியார் மண்டபத்தை மீண்டும் அடைந்தது. இதில் மருத்துவர்கள், தனியா நர்சிங் கல்லூரி மாணவிகள் போதை ஒழிப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.