தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மாதா கோவில் சாலை பகுதியில் ஆறுமுகம் பிள்ளை என்ற பெயரில் நாட்டு மருந்து கடை பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.
நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடை அடைத்து வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலையில் கடையில் அவரின் இருந்து திடீரென புகை வருவதை கண்டு அவ் வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் கடையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இச் சம்பவம் அறிந்து இடத்திற்கு வந்த தீயணைப்புத் வீரர்கள் புகை மூட்டத்துடன் தெரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர் இந்த தீ விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக விபத்து நடைபெற்று இருப்பதாக தெரியவந்தது. தீ விபத்தினால் கடையில் உள்ளே இருந்த நாட்டு மருந்துகள் மற்றும் பூஜை பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன இதன் மதிப்பு 30 லட்ச ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது இரவு நேரம் என்பதால் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.