தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில்  
அகில இந்திய சிகை மற்றும் அழகு கலை சங்கத்தின் கோவில்பட்டி நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் புதிய தொழில்நுட்ப கருத்தரங்கு நிகழ்ச்சி  நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் மினி தலைமை வகித்தார். இதில், சிகை மற்றும் அழகு கலை அலங்காரம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.

பின்னர், சங்கத்தின் மாநிலத் தலைவர் மினி, செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் புதிதாக சந்தைக்கு வந்துள்ள அழகு கலை சாதனங்கள் தொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும், இந்தச் சங்கத்தின் மூலம் அழகு கலை பயிற்சி, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களையும் சங்க உறுப்பினர்களுக்கு மானியத்தில் பெற்று தருகிறோம்.  இதுபோன்று பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அழகு கலை நிபுணர்களில் பெரும்பாலானோர் பெண்கள் தான். எனவே, இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசு அழகு கலை நிபுணர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”