20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை  சீரமைக்காத அரசினை கண்டித்தும், சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் மந்திதோப்பு சாலையும் ஒன்று பல்வேறு கிராமங்களை கோவில்பட்டி நகருடன் இணைக்கக்கூடிய முக்கியமான சாலை. இந்த சாலை சேதம் அடைந்து கொண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவது மட்டுமின்றி விபத்துகளும் நடைபெற்று வருகிறது.

 அவ்வப்போது  பேஜ் ஒர்க் முறையில் பராமரிக்கப்பட்டாலும், சாலை முழுவதும் சீரமைக்கப்படுவதில்லை, எனவே 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மந்திதோப்பு சாலையை  சீரமைக்க வேண்டும், விரிவுபடுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள், போராட்டங்கள் நடைபெற்று வந்த போதிலும் தற்போது வரை  சாலை சீரமைக்கப்படவில்லை என்பதால் அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள் நலச் சங்கத்தினர், கருத்தூரிமை பாதுகாப்பு கூட்டமை மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மந்திதோப்பு சாலை பகுதியில் கடையடைப்பு மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். 

அதன்படி இன்று காலை முதல் மந்திதோப்பு சாலை பகுதியில் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி அரசுக்கு தங்களது எதிரப்பினை தெரிவித்துள்ளனர்.
 

Related

“சட்டத்துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்”