கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எட்டையாபுரம் சாலையில் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 160 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி திடீரென ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் மாணவிகளுக்கு உள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து விடுதி காப்பாளர்களிடம் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். 

மாணவிகளிடம் விடுதில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இப்போது மாணவிகள் அதிகமான மாணவிகளுக்கு இடம் கிடைக்காமல் சூழ்நிலை இருப்பதாகவும் , கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதி இல்லை என்பதால் அரசின் இந்த விடுதியை நம்பித்தான் பயலுவதாகவும், எனவே கூடுதலாக மாணவிகள் தங்கும் வகையில் கட்டிடம் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி நிச்சயமாக கூடுதலாக மாணவிகள் தங்கு வகையில், போதிய இட வசதியுடன் விடுதி விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும்  உங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்  குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக பயின்று வருகின்றனர்.  ஆனால் கோவில்பட்டி அரசு மாணவர் விடுதியில் 160 மாணவிகள் மட்டும் தங்கி பயலும் அளவிற்கு தான் கட்டிட வசதி உள்ளது. எனவே மாணவிகள் கூடுதலாக தங்கிப் பயிலும் வகையில் கட்டிட வசதி வேண்டும் என்பது மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related

“பணிநிரந்தரம் ,ஊதிய உயர்வு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்!”